மழையும் பெண்ணும்







                   மேகம் என்னும் 
கருங்கூந்தலை அள்ளி முடித்து ,
                     மின்னல் போன்ற 
உன் பார்வை என் மேல் பாய , 
                    வானவில் என்னும் 
உடையை தரித்து ,
                   மழை நீராய் 
என் உயிரை அடித்து சென்று விட்டாயே !

பிரிவும் நண்பனும்

பிரிவின் போது தான் மனம்
அதிகமாக நண்பனை நாடுகின்றது,
தோழனை தேடுகின்றது,
உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
மாமா, மச்சான் என்று அழைப்பதும்
மனத்தில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதும்
அவனிடமே,,, 
அவனே என் உயிர்,
அவனே என் அடையாளம்,
அவனே என் சந்தோசம்,
பிரிவே போய்விடு, என் நண்பன் என்றும் என் உள்ளத்தில் தான் வசிக்கிறான்,
அவனை காணும் நாள் உனக்கு தான் பிரிவு ஏற்படும் என்னிடமிருந்து.....



நீர்ச்சோறும் அமிர்தம் தான்

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்
அவளின் கையால் அள்ளிக்கொடுத்தால்....

அதுவே அவளின் கைப்பக்குவம்,
அதுவே பாசத்திற்கான தனித்துவம்,

அதுவே அம்மாவின் சாப்பாடு...

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்....

அன்றொரு நாள்



நானும் என் நண்பனும் ஒரே (கல்லூரிச்)சாலையில் சென்றோம்,
நாங்கள் இனி பிரிய மாட்டோம் என சபதம் ஏற்றோம்,

ஆனால்,
இன்றோ சாலை பிரிகின்றது, 
இது தான் யதார்த்தம்,

மீண்டும் சந்திக்கையில்;
உதட்டில் புன்னகை தவழும்,
மனத்தில் மகிழ்ச்சி  நிலவும்,
முகத்தில் மலர்ச்சி  மலரும்,

காத்திருக்கிறேன்,
அன்றொரு நாள் என்று வரும்?

அவள்

அவள்

அன்பை உருவாக்கியவள் அவளே,
அன்பை உணரச்செய்தவள் அவளே,

நீ இன்றி நான் இல்லை, என்பவள் இல்லை அவள்,
நான் வாழ்வதே உனக்காக தான் என்று இருப்பவள் அவள்.

அவளே அன்னை.....

நாம் மனிதர்களா?

நாம் மனிதர்களா?

அலைபேசி என்றோம்,
சிட்டுக்குருவியியை இழந்தோம்.
வளர்ச்சிக்கான சாலைகள் என்றோம்,
மரங்களை இழந்தோம்.
நதிகள் மிகுந்த நாடு என்றோம்,
தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறோம்.
வளங்கள் நிறைந்த நாடு என்றோம்,
வாழ வழிஇன்றி இருக்கிறோம்.
ஒற்றுமையானவர்கள் என்றோம்,
வேற்றுமைஇல் கிடக்கிறோம்.

சிந்தித்து கூறுங்கள்,
நாம் மனிதர்களா?

தேர்வு அறைகளில்















உன் நினைவுகள் தான் என் நினைவுகளில் எப்போதும்..... 

உன்னை மட்டுமே நாள் முழுவதும் சுமந்து கொண்டு திரிகிறேன்.... 

என் ஆவி தீரும் அளவுக்கு உன்னை தெரிந்து கொண்டேன்.... 

கல்லூரிக்கு சென்றாலும் உன் ஞாபகமே என்னுள்.... 

இத்தனை விஷயங்கள் செய்தேன் உனக்காக.... 

ஏன்! நீ மட்டும் என் நினைவுகளில் இல்லாமல் மறைந்து போகிறாய் 

என் தேர்வு அறைகளில் இருந்து மட்டும் .....